Sunday, August 15, 2010

இணைக்க
சீன பழமொழி:

துன்ப பறவைகள் உங்கள் தலை மேல்
வட்டமிடுவதை தடுக்க முடியாது,
ஆனால் அது உங்கள் தலை மேல்
கூடு கட்டாதபடி தடுத்து கொள்ள முடியும்.
. Download As PDF

Wednesday, July 28, 2010

epic browser

இணைக்க

இந்திய இணைய வாசிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தி


இந்திய இணைய வாசிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக நம் நாட்டிலேயே தயாரான இந்திய பிரவுசர் அறிமுகமாகி இருக்கிறது. .
எபிக் பிரவுசர் எனும் பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பிரவுசர் ஒபன் சோர்ஸ் தொழில்நுட்பம் சார்ந்த மோசில்லா மென்பொருளை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

பெங்களூரைச் சேர்ந்த ஹிடன் ரிப்ளக்ஸ் எனும் நிறுவனம் இந்த பிரவுசரை உருவாக்கி உள்ளது. அமெரிக்காவில் சென்று ஐடி நிறுவனத்தில் பணியாற்றி திரும்பிய அலோக் பரத்வாஜ் எனும் சாப்ட்வேர் நிபுணர் இந்த நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

ஏற்கனவே இணைய உலகில் பாடு ஓட்டர்ஸ் எனும் இணைய தளத்தை நடத்தி புகழ்பெற்றவர் இவர். தேஜஸ் வியாஸ் உள்ளிட்ட தனது நண்பர்களோடு இணைந்து இந்த நிறுவனத்தை அலோக் நடத்தி வருகிறார். இந்நிறுவனம் இந்தியர்களுக்கென்று ஒரு தனி பிரவுசர் தேவை என்பதை உணர்ந்து எபிக் பிரவுசரை வடிவமைத்துள்ளது.

புகழ் பெற்ற எக்ஸ்புளோரர், ஓபரா, கூகுலின் குரோம், மோசில்லாவின் பயர்பாக்ஸ் என பல பிரவுசர்கள் இருந்தாலும் தனித்துவமான பல அம்சங்களோடு இந்தியர்களுக்கென்று எபிக் பிரவுசர் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கான முதல் பிரவுசர் என்று பெருமிதம் கொள்ளும் இந்நிறுவனம் உலகிலேயே வைரஸ் எதிர்ப்பு மென்பொருளை கொண்ட முதல் பிரவுசர் இது என்றும் கூறுகிறது. எனவே இந்த பிரவுசரை பயன்படுத்தினால் வைரஸ் தொல்லை பற்றிய கவலை இல்லாமல் இருக்கலாம் என எதிர்பார்க்கலாம்.
அதோடு ஆபத்தான தளங்கள் பற்றிய எச்சரிக்கையும் இந்த பிரவுசரிலேயே கிடைக்கும். இணைய தளங்கள் மூலம் நடத்தப்படும் பல்வேறு வகையான பிஷ்ஷிங் மோசடி குறித்தும் இந்த தளம் இணையவாசிகளை எச்சரிக்கை செய்தவண்ணம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Download As PDF

Wednesday, May 12, 2010

முனைவர் சுப வீரபாண்டியன்

இணைக்க
சமீபத்தில் முனைவர் சுப வீரபாண்டியன் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. செல்பேசியில் நம் தமிழ் இலக்கியத்தை படிக்க முடியும் என்றவுடன் அவர் அதை நம்பவில்லை. அவருடைய செல்பேசியிலேயே திருக்குறளை மாற்றி தந்தவுடன் வியப்பு மேலிட அதை பார்த்தார். அன்று இரவு சுமார் 11 மணிக்கு என்னுடைய செல்பேசிக்கு தொடர்பு கொண்டு செல்பேசி புத்தகத்தை பற்றி விரிவாக கேட்டறிந்தார். மொபைல்வேதா பற்றி முழுவதும் கூறினேன். நாங்கள் கடந்து வந்த பாதையையும், மேலும் எங்களுடைய இலக்கு பற்றியும் கூறினேன்.
ஒரு வாரம் கழித்து கலைஞர் தொலைக்காட்சியில் ஒன்றே சொல் நன்றே சொல் நிகழ்ச்சியில் மொபைல்வேதா பற்றியும் செல்பேசியில் தமிழ் இலக்கியம் பற்றியும் கூறினார். எனக்கு ஏற்பட்ட வியப்பு என்னவென்றால் என்னுடன் உரையாடியது குறைவான நேரமே விபரங்களை சரியாக கிரகித்து அருமையாக தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூறினார். முனைவர் சுப வீரபாண்டியன் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். எங்களை சரியாக புரிந்துக்கொண்டு உஊக்குவித்தமைக்கு ....
.....கா. கதிரேசன் .... Download As PDF

Wednesday, March 24, 2010

ஒருவர் ஆங்கிலம் படிக்க , சரளமாக ஆங்கிலம பேச

இணைக்க
ஒருவர் ஆங்கிலம் படிக்க ,சரளமாக ஆங்கிலம பேச
ஆங்கிலத்தை தமிழ் மூலம் படிப்பதைவிட
ஆங்கிலம் மூலம் ஆங்கிலத்தை படிக்கலாம் எளிய முறைகள்
புரியவைப்பதில் புதுமையாக படங்களுடன் தரும் விளக்கம் என
அனைத்தும் சிறப்பாக தான் உள்ளது இனி எப்படி உங்கள் ஆங்கில
அறிவை மேம்படுத்திக்கொள்ளலாம் என்று பார்ப்போம்.
Download As PDF